உலகம்

கதிரியக்கக் கருவியை தொலைத்துவிட்டுத் தேடும் ஆஸ்திரேலியா: நாணயத்தை விடவும் சின்னதாம்

31st Jan 2023 03:05 PM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவில், ஒரு நாணயத்தைவிடவும் மிகச் சிறிதான கதிரியக்கக் கருவியைத் தொலைத்துவிட்டு, பல்வேறு துறையினரும் அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கத்திலிருந்து டிரக் வழியாக பொருள்களை வேறிடத்துக்கு எடுத்துச் சென்ற போது, மிகவும் முக்கியமான கதிரியக்கக் கருவி காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆஸ்திரேலியாவில் காணாமல் போன அந்த கதிரியக்கக் கருவியை அப்படியே விட்டுவிட முடியாத அளவுக்கு அது மிகவும் அபாயம் நிறைந்த உயிரைக் கொல்லும் சக்தி வாய்ந்த கதிரியக்கத்தை வெளியேற்றும் கருவி என்பதால், அதனை பல துறை ஊழியர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

டிரக் பயணித்து வந்த சாலை முழுவதையும் சல்லடை போட்டுத்தேடும் பணி கடந்த சனிக்கிழமை முதல் தொடர்கிறது.

ADVERTISEMENT

கையில் மெட்டல் டிடக்டர்களை வைத்துக் கொண்டு 36 கிலோ மீட்டர் சாலையில் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் மிகவும் பரபரப்பான சாலையில் 8X6 மில்லி மீட்டர் அளவுள்ள கதிரியைக்கக் கருவியை வீரர்கள் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

Tags : australia
ADVERTISEMENT
ADVERTISEMENT