உலகம்

சீனா: ஜின்ஜியாங்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

31st Jan 2023 02:43 AM

ADVERTISEMENT

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா கூறுகையில், உள்ளூா் நேரப்படி காலை 7.49 மணிக்கு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதில் யாரும் காயமடைந்ததாகவோ பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்றும் தெரிவித்தது.

ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்தாலும், 5.7 அலகுகளாக மட்டுமே பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மலைகளையும், பாலைவனங்களையும் கொண்ட ஜின்ஹூவாவில் மக்கள் நெருக்கம் இல்லாத பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT