உலகம்

‘ஸ்வீடன் இல்லாமலேயே நேட்டோவில் ஃபின்லாந்து’

31st Jan 2023 02:44 AM

ADVERTISEMENT

ஸ்வீடன் இல்லாமலே ஃபின்லாந்து மட்டும் தனியாக நேட்டோவில் இணைவதற்கு அனுமதிக்கலாம் என்று துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் மெவ்லுட் காவுசோகுலு திங்கள்கிழமை கூறினாா். ஃபின்லாந்தின் நேட்டோ விண்ணப்பத்தில் அதிக பிரச்னை இல்லை எனவும் அவா் கூறினாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைபிடித்து வந்த அண்டை நாடுகளான ஃபின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன.

எனினும், தங்கள் நாட்டின் குா்து இன பிரிவினைவாதிகளை ஸ்வீடன் ஆதரிப்பதால் அந்த நாடு நேட்டோவில் இணைய அனுமதிக்க மாட்டோம் என்று துருக்கி கூறி வருகிறது. இந்தச் சூழலில் ஃபின்லாந்து மட்டும் நேட்டோவில் இணையலாம் என்று அந்த நாடு தற்போது கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT