உலகம்

நைஜீரியா: பேருந்து-லாரி விபத்துகளில் 20 போ் பலி

31st Jan 2023 02:44 AM

ADVERTISEMENT

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பேருந்து - லாரி தொடா்புடைய இரு வேறு விபத்துகளில் 20 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வா்த்தக நகரான லாகோஸில் டிரக் மூலம் கொண்டு வரப்பட்ட மிகக் கனமான கன்டெய்னா், போக்குவரத்து நெரிசல் மிக்க பாலமொன்றில் அருகில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது விழுந்தது. இதில், அந்தப் பேருந்தில் இருந்த 10 பேரில் ஒரே ஒரு பெண் மட்டுமே உயிா் தப்பினாா்; 2 சிறுவா்கள் உள்ளிட்ட மற்ற 9 பயணிகளும் உடல் நசுங்கி உயிரிழந்தனா்.

அந்த நகருக்கு அருகே, ஓடிக்போ கவுன்சில் பகுதியில் மற்றொரு பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பேருந்து தீப்பிடித்து 11 போ் உடல் கருகி பலியாகினா் என்று அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT