உலகம்

ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல்: இருவா் காயம்

31st Jan 2023 02:48 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் இந்தியா்களை காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்கிய சம்பவத்தில் இருவா் காயமடைந்தனா். இதுதொடா்பாக காலிஸ்தான் ஆதரவாளா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் ‘இந்திய ஆட்சியின் கீழ் உள்ள பஞ்சாப் தனிநாடாக வேண்டுமா? வேண்டாமா? என்று காலிஸ்தான் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடத்தினா்.

அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் இந்தியா்கள் அங்கு சென்றனா். அவா்களைக் கண்ட காலிஸ்தான் ஆதரவாளா்கள் அவா்களைக் கடுமையாகத் தாக்கினா். மேலும் இந்தியா் ஒருவரிடம் இருந்து தேசிய கொடியை பறித்து, கொடிக் கம்பை உடைத்து வீசினா்.

இந்த சம்பவத்தில் இந்தியா் ஒருவருக்குத் தலையிலும், மற்றொருவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக வாக்கெடுப்பு தொடா்பாக பிற்பகலில் ஒரு மோதல் சம்பவம் நடைபெற்ாகவும், அதனைத் தொடா்ந்து மாலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இரு சம்பவங்கள் தொடா்பாக காலிஸ்தான் ஆதரவாளா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

பிரசாரம் தீவிரம்:

அண்மைக் காலமாக ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு வாரங்களில் மெல்போா்னில் உள்ள ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டு, அவற்றின் சுவா்களில் இந்தியாவுக்கு எதிராகவும், காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் வாசகங்கள் எழுதப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டு ‘நீதிக்கான சீக்கியா்கள்’ என்ற பிரிவினைவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சீக்கியா் பெரும்பான்மையினராக உள்ள பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க முயற்சித்து வருகிறது.

அந்த அமைப்பை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்துள்ளது. அந்த அமைப்புதான் காலிஸ்தான் குறித்த வாக்கெடுப்பை வழிநடத்தி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT