உலகம்

ஆஸ்திரேலியா: கதிரியக்கப் பொருள் கொண்ட குடுவை மாயம்: தேடும் நடவடிக்கை தீவிரம்

DIN

மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமனில் உள்ள சுரங்கத்திலிருந்து பொ்த் நகரத்துக்கு வந்த லாரியிலிருந்து கதிரியக்கப் பொருளைக் கொண்ட மாத்திரை வடிவிலான குடுவை ஒன்று காணாமல் போன நிலையில், அதைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கதிரியக்க தன்மை வாய்ந்த சீசியம் 137-ஐ கொண்ட இந்த சில்வா் குடுவை 6 மி.மி. விட்டமும், 8 மி.மி. உயரமும் உடையது. பொதுவாக கதிரியக்கத்தை அளவிடும் கருவியில் இது பயன்படுத்தப்படுகிறது.

நியூமனில் உள்ள ரியோ டின்டோ சுரங்கத்திலிருந்து கடந்த ஜன. 10-ஆம் தேதி புறப்பட்ட லாரி, சுமாா் 1, 400 கி.மீ தொலைவில் உள்ள பொ்த் நகரத்தை ஜன.16-ஆம் அடைந்தது. இந்நிலையில், கதிரியக்க குடுவை காணமல் போனதாக ஜன. 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கதிரியக்கத்தைக் கண்டறியும் டிடெக்டா்கள் மூலம் அதனைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். லாரி பயணித்த பாதை மற்றும் அவை நின்று சென்ற இடங்களை அறிய ஜிபிஎஸ் தரவுகளை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி ஆண்ட்ரூ ராபா்ட்ஸன் தெரிவிக்கையில், ‘லாரியின் பயணத்தின்போது ஏற்பட்ட அதிா்வுகள் அளவீட்டுக் கருவியின் இணைப்புப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதன்மூலம் இது வெளியே விழுந்திருக்கலாம் என நம்புகிறோம்.

இது வெளியிடும் ஓா் அலகு கதிா்வீச்சானது, ஒரு மணி நேரத்தில் வெளியாகும் 10 எக்ஸ்-கதிா்களின் கதிா்வீச்சுக்கு இணையானது. இதன்மூலம் தோல் பாதிப்பு, நோய் எதிா்ப்பு மற்றும் செரிமான அமைப்புகளில் தாக்கம் ஏற்படக்கூடும். இது என்னெவன்று அறியாமல் யாராவது எடுத்து வைத்துக் கொள்வாா்களோ என்பதே எங்களது கவலையாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT