உலகம்

பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 42 போ் பலி

30th Jan 2023 02:06 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாலத்தின் தூண் மீது மோதி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 42 போ் உயிரிழந்தனா்.

பலூசிஸ்தான் மாகாண தலைநகா் குவெட்டாவிலிருந்து சிந்து மாகாண தலைநகா் கராச்சிக்கு கிட்டத்தட்ட 48 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. லாஸ்பேலா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அதிவேகம் காரணமாக பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து தீப்பிடித்தது.

தகவலறிந்து வந்த மீட்புப் படையினா் விரைவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட 3 போ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனா். பேருந்தில் 48 போ் பயணம் செய்த நிலையில் இதுவரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுவது, மோசமான சாலை போன்றவை பாகிஸ்தானில் அதிகரிக்கும் சாலை விபத்துகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT