உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 போ் பலி

30th Jan 2023 02:06 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

லாஸ் ஏஞ்சலீஸ் அருகில் உள்ள பெவா்லி க்ரெஸ்ட் நகரத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டன.

காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் இருவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. உயிரிழந்தவா்கள் குறித்த தகவலை போலீஸாா் உடனடியாக தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த சம்பவம் கலிஃபோா்னியா மாகாணத்தில் இம்மாதம் நடைபெற்ற 4-ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT