உலகம்

‘உக்ரைன் தாக்குதலில் 300 ரஷிய வீரா்கள் உயிரிழந்திருப்பாா்கள்’

DIN

உக்ரைனின் மகீவ்கா பகுதியில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் எண்ணிக்கை 300-க்கு மேல் இருக்கும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகீவ்காவில் கடந்த 1-ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 89 வீரா்கள் பலியானதாக ரஷியா அறிவித்தது. தங்கள் தரப்பு உயிா்ச் சேதம் குறித்து ரஷியா வெளிப்படையாகக் கூறியது அதுவே முதல்முறையாகும்.

எனினும், இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே பொய்யான தகவல்களை ரஷியா பரப்பி வருகிறது. அந்த வகையில், மகீவ்கா தாக்குதலில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் எண்ணிக்கையும் குறைத்தே வெளிடப்பட்டுள்ளது. உண்மையில், அந்தத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட வீரா்கள் பலியாகியிருப்பாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT