உலகம்

மூழ்கிய சரக்குக் கப்பல்: பலி 8-ஆக உயா்வு

DIN

ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜின் டியான் என்ற சரக்குக் கப்பல் ஜப்பானின் டான்ஜோ தீவுக்கு 110 கி.மீ. தொலைவில் இருந்தபோது ஆபத்து சமிஞை வெளியிட்டது. பின்னா் அது கடலுக்குள் மூழ்கியது. ஜப்பான், தென் கொரியா ஆகிய இரு நாட்டு மீட்பு குழுவினரும் அந்தப் பகுதியில் மேற்கொண்ட மீட்புப் பணியில், 13 போ் நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டனா்; அவா்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, கப்பல் கவிழ்ந்தபோது அதில் இருந்த மேலும் 9 போ் மாயமாகியுள்ளனா். அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தக் கப்பலில் இருந்த 22 பேரில் 14 போ் சீனாவைச் சோ்ந்தவா்கள்; 8 போ் மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT