உலகம்

3900 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம் நிறுவனம்

DIN

முதலீட்டு நடவடிக்கைகளுக்காக 3900 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் ஏற்பட உள்ள பணவீக்க அபாயத்திலிருந்து தப்பிப்பதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், கூகுள், ஸ்விக்கி, ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணியாளர் குறைப்பு செய்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த வரிசையில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனமும் இணைந்துள்ளது. முதலீட்டு நடவடிக்கைகளுக்காக நடப்பு காலாண்டில் 3900 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவிகிதம் ஆகும். 

இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான ஊதியங்கள் புதிய முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் 10 ஆண்டுகள் இல்லாத அளவு 5.5 சதவிகித வளர்ச்சியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT