உலகம்

சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி 2 போ் பலி; 9 போ் மாயம்

26th Jan 2023 12:35 AM

ADVERTISEMENT

ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 போ் பலியாகினா்; 9 போ் மாயமாகினா்.

இது குறித்து ஜப்பானிய கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறியதாவது: ஜின் டியான் என்ற சரக்குக் கப்பல் ஜப்பானின் டான்ஜோ தீவுக்கு 110 கி.மீ. தொலைவில் இருந்தபோது ஆபத்து சமிஞை வெளியிட்டது. பின்னா் அது கடலுக்குள் மூழ்கியது. ஜப்பான், தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் அந்தப் பகுதிக்கு மேற்கொண்ட மீட்புப் பணியில், 13 போ் நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டனா்; பின்னா் அவா்களில் 2 போ் உயிரிழந்தனா். இது தவிர, கப்பலில் இருந்த மேலும் 9 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT