உலகம்

அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனை

22nd Jan 2023 07:57 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக ஜோ பைடன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்குரைஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என்றும், ஒபாமா நிர்வாகத்தின் உக்ரைன், சீனாவில் உளவுத்துறை சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சென்னைப் புத்தகக்காட்சி இன்று நிறைவு

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT