மனிதர்களுக்கு மிக உற்ற தோழனாக இருக்கும் விலங்குகளில் நாய்க்கு முதலிடம். அந்த வகையில் இருந்த, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் ஃபட்ஜ் இன்று மரணமடைந்தது.
சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் பலரும் ஃபட்ஜ் நாய்க்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிக்க.. சீனாவின் முதல் முறையாக இப்படி நிகழ்ந்துள்ளது.. அது இந்தியாவை பாதிக்குமோ?
நடிகர் சுஷாந்த் மிகவும் விரும்பி வளர்த்த நாய் ஃபட்ஜ் மரணம் குறித்து அவரது சகோதரி பிரியங்கா சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். அது தொடர்பான விடியோ, சுஷாந்த் சிங்கின் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது.
சொர்கத்தில் நீ உனது நண்பருடன் இணைந்திருப்பாய் என்று நம்புகிறேன். நாங்களும் விரைவில் உன்னை பின்தொடர்வோம். அதுவரை எங்கள் இதயம் உனக்காக துடித்துக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க.. இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்
ஃபட்ஜ் நாயுடன் சுஷாந்த் சிங் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
சுஷாந்த் சிங் மரணத்தின் போது, அவரை தேடித் தேடி ஃப்ட்ஜ் கவலையுடன் இருந்த செய்திகள் அப்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, ஃபட்ஜ் மிகவும் பிரபலமடைந்திருந்தது. சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபட்ஜ் மரணத்தை தழுவியிருக்கிறது.