உலகம்

தாவூத் இப்ராஹிம் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மருமகன்

17th Jan 2023 01:21 PM

ADVERTISEMENT

மும்பை: தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பிடம், தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன் அலிஷா பார்கர், அளித்திருக்கும் பல்வேறு தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. சீனாவின் முதல் முறையாக இப்படி நிகழ்ந்துள்ளது.. அது இந்தியாவை பாதிக்குமோ?

ஏற்கனவே, மைஸாபின் என்பவருடன் தாவூத் இப்ராஹிமுக்கு திருமணமான நிலையில், பாகிஸ்தானின் பதான் சமூகத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தாவூத் இப்ராஹிமின் முதல் மனைவியும் வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம், தொடர்ந்து குடும்பத்தினருடன் பேசி வரும் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க.. இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் மற்றொரு பாதுகாப்பான இடத்துக்கு தாவூத் இப்ராஹிம் குடிபெயர்ந்து விட்டதையும்ட அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT