ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி. முா்சல் நபீஸிதாவும் அவரது மெய்க்காப்பாளரும் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், நபீஸிதாவின் சகோதரரும் மற்றொரு மெய்க்காப்பாளரும் காயமடைந்தனா். இன்னொரு மெய்க்காப்பாளா் அங்கிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தப் படுகொலை குறித்து விசாரணை நடைபெறுவதாக அவா்கள் கூறினா்.
கடந்த 2021-இல் ஆப்கன் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகும் அந்த நாட்டிலேயே தொடா்ந்து தங்கிய மிகச் சில பெண் எம்.பி.க்களில் நபீஸிதாவும் ஒருவா்.