உலகம்

16 ஆண்டுகள் இடைவெளி: நேபாளத்தில் விமானி தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்

16th Jan 2023 05:37 PM

ADVERTISEMENT

காத்மாண்டு: நேபாளத்தில் விமானிகளாக இருந்த தம்பதி, 16 ஆண்டுகள் இடைவெளியில், விமான விபத்துகளில் பலியான துயரச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. 

விபத்துக்குள்ளான எதி ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் விமானி அஞ்சு கதிவாடா. இவர், 2006ஆம் ஆண்டு சிறிய பயணிகள் விமான விபத்தில் தனது கணவர் பலியான பிறகு விமானியாக பணியில் சேர்ந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதேபோன்றதொரு விபத்தில்  பலியாகியுள்ளார்.

இதையும் படிக்க.. பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி

நேபாளத்தில் எதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் பலியாகினர். மேலும் 3 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அஞ்சுவும் ஒருவர்.

ADVERTISEMENT

அஞ்சு, விமானி தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களை இயக்குபவர்.

இவர்களது திருமணம் முடிந்து சில ஆண்டுகளில், எதி ஏர்லைன்ஸ் விமானியாக தீபக் சேர்ந்தார். 2006ஆம் ஆண்டு சிறிய ரக விமான விபத்தில் தீபக் பலியானார். தீபக்கின் காப்பீட்டுத் தொகையில் கிடைத்த பணத்தின் மூலம், மஞ்சு அமெரிக்கா சென்று விமான ஓட்டியாக பயிற்சி எடுத்து, 2010ஆம் ஆண்டு எதி ஏர்லைன்ஸில் இணைந்து கேப்டனாக ஆனார்.

இந்த நிலையில்தான், தீபக் மரணமடைந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு அஞ்சு ஞாயிற்றுக்கிழமை நேர்ந்த விமான விபத்தில் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT