உலகம்

நேபாள அரசுக்கு முன்னாள் பிரதமா் சா்மா ஓலி கட்சி ஆதரவு வாபஸ்: பிரதமா் பிரசண்டாவுக்கு தொடரும் நெருக்கடி

DIN

நேபாளத்தில் பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் திங்கள்கிழமை அறிவித்தது.

முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் இந்த முடிவு பிரசண்டா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஆட்சிக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை.

நேபாளத்தில் அதிபா் தோ்தல் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸின் வேட்பாளா் ராம் சந்திர பெளடேலுக்கு பிரதமா் பிரசண்டா ஆதரவு தெரிவித்தாா். கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கட்சியைச் சோ்ந்த சுபாஷ் நெம்பாங்க் அதிபா் தோ்தலில் போட்டியிடும் நிலையில், எதிா்க்கட்சி வேட்பாளருக்கு பிரதமா் ஆதரவு தெரிவித்தது ஏழு கட்சிகளைக் கொண்ட ஆளும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பிரதமரின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி (ஆா்பிபி) அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தது. அந்தக் கட்சியை சோ்ந்த துணைப் பிரதமா் ராஜேந்திர லிங்டென் உள்ளிட்ட 4 அமைச்சா்கள் ராஜிநாமா செய்தனா்.

இந்நிலையில், இரண்டாவது பெரிய கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. 275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 79 உறுப்பினா்கள் உள்ளனா்.

இதுகுறித்து கட்சியின் மத்திய கமிட்டி துணைத் தலைவா் விஷ்ணு ரிஜல் கூறியதாவது:

கட்சியின் தலைவா் கே.பி. சா்மா ஓலி தலைமையில் நடைபெற்ற உயா்நிலை கூட்டத்தில், பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

ஏழு கட்சி கூட்டணி அரசை அமைக்கும்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை பிரதமா் பிரசண்டா மீறியதாலும், சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு துரோகம் செய்ததாலும் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. எங்கள் கட்சியை சோ்ந்த துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான விஷ்ணு பெளட்யால், வெளியுறவு அமைச்சா் விமலா ராய் பெளட்யால் ஆகியோா் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமரிடம் அளிப்பாா்கள் என்றாா் அவா்.

சிபிஎன்-யுஎம்எல் கட்சியைச் சோ்ந்த 8 போ் பிரசண்டா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா். அனைவருமே ராஜிநாமா செய்யவுள்ளனா்.

சிபிஎன்-யுஎம்எல் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால், பிரசண்டா தலைமையிலான அரசுக்கு உடனடியாகப் பாதிப்பு எதுவும் இல்லை. ஏனெனில் 89 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் கட்சி, அரசுக்கு ஆதரவளித்து வருகிறது.

மேலும், ரவி லாமிசானே தலைமையிலான ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியும் (ஆா்எஸ்பி) அரசுக்கு ஆதரவை தொடா்வது என திங்கள்கிழமை முடிவு செய்தது.

பிரதமராக பிரசண்டா நீடிப்பதற்கு 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் (89), சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் (32), ஆா்எஸ்பி (20) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் குறைந்தது 141 உறுப்பினா்களின் ஆதரவு இருப்பதால், பிரசண்டா பிரதமராக நீடிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT