உலகம்

ஈரானில் பள்ளி செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம்

DIN


டெஹ்ரான்: ஈரானில், பெண்கள் பள்ளி செல்வதைத் தடுப்பதற்காக சிலர், பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுத்ததாக அந்நாட்டு துணை அமைச்சர் வெளியிட்ட தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானின் தெற்கு டெஹ்ரானில் அமைந்துள்ள கோம் பகுதியில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிச் சிறுமிகள் பலருக்கும் அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் யூநெஸ் பனாஹி, பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

கோம் பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் ஏராளமானோருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதும், அனைத்துப் பள்ளிகளும் குறிப்பாக பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அவர் இதனை விரிவாக விளக்கவில்லை. இது தொடர்பாக யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதும் தெரியவரவில்லை என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் தொடரும் போராட்டம்

ஈரானின் சா்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கலாசார காவலா்களால் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22), காவலில் உயிரிழந்தாா். அதையடுத்து நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

இதில் 70 சிறாா்கள் உள்பட 517 போராட்டக்காரா்கள், 68 பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.

போராட்ட வன்முறையில் ஈடுபட்டதாக பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களில் இருவா் சா்வதேச எதிா்ப்புக்கிடையே கடந்த டிசம்பா் மாதம் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டனா்.

இந்த நிலையில், போராட்டக்காரா்கள் தூக்கிலிடப்பட்டதன் 40-ஆவது நினைவு தினத்தையொட்டி டெஹ்ரான், அராக், இஸ்ஃபஹான், இஸே உள்ளிட்ட நகரங்களில் கடந்த வாரம் ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT