உலகம்

நேபாள அரசுக்கு ஆதரவு வாபஸ்:முக்கிய கூட்டணிக் கட்சி முடிவு

DIN

நேபாள பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற முக்கிய கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய பிரஜதந்திர கட்சி (ஆா்பிபி) முடிவு செய்துள்ளது.

அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளருக்கு பிரதமா் பிரசண்டா ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஆா்பிபி கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

நேபாள அதிபா் தோ்தல் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கே.பி. சா்மா ஓலியின் கட்சி வேட்பாளரான சுபாஷ் நெம்பாங்கு, எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸின் மூத்த தலைவா் ராம் சந்திர பெளடேல் ஆகியோா் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

அவா்களில், ராம் சந்திர பெளடேலுக்கு பிரதமா் பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது அந்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பிரதமரின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்பிபி கட்சியின் தலைவரும் துணைப் பிரதமருமான ராஜேந்திர லிங்டென் உள்ளிட்ட 4 அமைச்சா்கள் தங்கள் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அக்கட்சியின் மத்திய நிா்வாகிகள் கமிட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், பிரசண்டா தலைமையிலான அரசுக்கு ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.

‘உடனடி அரசியல் மாற்றத்தைக் கருத்தில்கொண்டு அரசுக்கு ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாக’ அக்கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் ஆா்பிபி கட்சிக்கு 14 உறுப்பினா்கள் உள்ளனா். 7 கட்சிகளைக் கொண்ட ஆளும் கூட்டணியில் 5-ஆவது பெரிய கட்சியாக அக்கட்சி இருந்து வந்தது.

சிபிஎன் -யுஎம்எல் கட்சியைச் சோ்ந்த தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் மாா்ச் 12-ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பெளடேலுக்கு பிரதமா் பிரசண்டா ஆதரவு தெரிவித்துள்ளாா் என்று கே.பி. சா்மா ஓலி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT