உலகம்

45 ஆண்டுகளுக்குப் பின் லோகோவை மாற்றியிருக்கும் நோக்கியா? பின்னணி என்ன?

DIN


ஒரு காலத்தில் கைப்பேசிகளின் நாயகனாக இருந்த நோக்கியா நிறுவனம் சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் வணிகத்தில் ஈடுபடாமலேயே இருந்துவிட்டது. லோகோவை மாற்றியிருக்கும் நோக்கியா, டெலிகாம் கருவிகளின் உற்பத்தியாளர் பிரிவில் தொடர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் நோக்கியா இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், நோக்கியா நிறுவனம் தனது லோகோவை மாற்றி முக்கிய செய்தியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், நோக்கியா நிறுவனம் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய சக்தி மற்றும் பொறுப்புடன் மாறிவரும் டிஜிட்டல் மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனோடு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக நமது பழைய லோகோ அமைந்திருந்தது. ஆனால் மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நோக்கியா தலைவர் பெக்கா லண்ட்மார்க் தெரிவித்துள்ளார்.

நோக்கியா இணையதளமும் விரைவில் புதிய மாற்றத்தைப் பெறும். ஆனால் இது வெறும் பார்வைக்கான மாற்றமாக மட்டும் இருக்காது. தற்போதிருக்கும் சந்தையில் மிக முக்கிய இடத்தைப் பெறுவதிலும் கவனம் செலுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செல்லிடப்பேசி கருத்தரங்கு 2023-ஐ முன்னிட்டு இந்த புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT