நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 83 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.16,694.51 கோடியாக உள்ளது.
முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 83 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.9,113.53 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் வட்டி வருவாய் 31 சதவீதம் உயா்ந்து ரூ.92,951 கோடியாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் வங்கியின் வாராக்கடன் ரூ.7,237.45 கோடியிலிருந்து ரூ.3,315.71 கோடியாகக் குறைந்துள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் ரூ.31,675.98 கோடியிலிருந்து 59 சதவீதம் அதிகரித்து ரூ.50,232.45 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.