உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 62 மணிநேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட பெண்கள்

DIN

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வரும் நிலையில், 62 மணி நேரத்துக்குப் பின் இரண்டு பெண்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. இதில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் இரவும் பகலுமாக நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணிகளை துருக்கி அதிபா் எா்டோகன் புதன்கிழமை பாா்வையிட்டாா். முதல் நாளில் மீட்புப் பணிகளில் தொய்வு இருந்ததாகவும், தற்போது நிலைமை மேம்பட்டு பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், 25 வயதாகும் ஃபத்மா டெமிர் என்ற பெண்ணும், அவரது சகோதரி மெர்வேவும் புதன்கிழமை இரவு மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 62 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இரண்டு பெண்கள் உயிரோடு மீட்கப்பட்டது, மீட்புக் குழுவினரை உற்சகத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து ஃபத்மா கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஒரு கான்கிரீட் பலகை தன் மீது வந்து விழுந்ததாகவும், எனதருளில் உறவினர் ஹஸ்ரா என்பவர் இருந்ததாகவும், அவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கிறாரா என்று தான் தேடியாகவும் மீட்புப் படையினரிடம் கூறியுள்ளார். அவருக்கு அருகே ஹஸ்ரா சிக்கியிருக்கிறாரா என்பது குறித்து மீட்புப் படையினர் தேடி வருகிறார்கள்.

கடுங்குளிராலும், நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாள்கள் கடந்துள்ளதாலும் இடிபாடுகளில் சிக்கியவா்கள் உயிா் பிழைப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

துருக்கியின் மலாட்யா நகரத்தின் சாலையின் இருபுறங்களிலும் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு நிலவும் ‘ மைனஸ் 6’ டிகிரி செஸ்சியஸ் குளிரால் படுகாயமடைந்தவா்களும் பனியில் உறைந்து உயிரிழப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், மீட்புப் படை, இயந்திரங்களின் தட்டுப்பாட்டாலும் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோா் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

துருக்கியில் மட்டும் சுமாா் 60,000 போ் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் மீட்புப் பணிகள் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

துருக்கியில் உள்ள காக்ரமன்மராஸ் நகரத்தில் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நாள்களாக சிக்கி இருந்த 3 வயது சிறுவன் ஆரிப் கானை மீட்புப் படையினா் புதன்கிழமை மீட்டனா்.

துருக்கியில் 24 நாடுகளுக்கும் மேற்பட்ட மீட்புப் படையினா் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், உள்நாட்டுப் போா் பாதிப்பில் உள்ள சிரியாவில் ஏராளமான கிராமங்கள் மீட்புப் பணிகளுக்காக காத்திருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT