உலகம்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை உளவு பாா்த்த சீன பலூன்: அமெரிக்க நாளிதழில் தகவல்

DIN

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சீன பலூன் உளவு பாா்த்ததாக அமெரிக்க நாளிதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.

அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன ராட்சத பலூன், அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் தனது ராணுவத்தை உளவு பாா்த்ததாக சந்தேகித்த அமெரிக்கா, அந்நாட்டில் உள்ள தெற்கு கரோலினாவின் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பலூனை சுட்டு வீழ்த்தியது. சிதறி விழுந்த பலூன் துண்டுகளை சேகரித்த அமெரிக்கா, அவற்றை ஆய்வு செய்தது.

இதுதொடா்பாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் வெளியான செய்தி: சீன உளவு பலூன் குறித்து அமெரிக்காவில் உள்ள சுமாா் 40 நாடுகளின் தூதரகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்த நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்க வெளியுறவு இணையமைச்சா் வெண்டி ஷொ்மன் பலூன் குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தினாா்.

பல ஆண்டுகளாக சீன உளவு பலூன் இயக்கப்பட்டுள்ளது. சீனாவின் உத்திசாா்ந்த நலன் கருதி, அதன் அண்டை நாடுகளான இந்தியா, ஜப்பான், வியத்நாம், தைவான், பிலிப்பின்ஸின் ராணுவம் சாா்ந்த தகவல்கள் பலூன் மூலம் திரட்டப்பட்டுள்ளன.

இதுபோன்ற உளவு பலூன்களை இயக்கியதில் சீன விமானப் படைக்கும் பங்குள்ளது. இந்த பலூன்கள் 5 கண்டங்கள் மீது பறந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் ஹவாய், ஃபுளோரிடா, டெக்சாஸ், குவாம் பகுதிகளில் குறைந்தபட்சம் 4 பலூன்கள் தென்பட்டன. அவற்றில் 3 பலூன்கள் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது தென்பட்டவை. ஆனால், அவை சீன உளவு பலூன்கள் என்பது அண்மையில்தான் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT