உலகம்

ஜூம் நிறுவனத்தின் 1,300 ஊழியர்கள் பணிநீக்கம்!

8th Feb 2023 08:21 AM

ADVERTISEMENT

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம், 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட உள்ள பணவீக்க அபாயத்திலிருந்து தப்பிப்பதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், கூகுள், ஸ்விக்கி, ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணியாளர் குறைப்பு செய்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா காலத்தில் அலுவலக கூட்டம் உள்பட சக மனிதர்களை இணைக்கும் பணியில் பெரிதும் உதவிய ஜூம் செயலியின் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பணிநீக்கத்தில் இணைந்த இன்ஃபோசிஸ்: எத்தனை பேர் தெரியுமா?

தொழில்நுட்ப நிறுவனங்களில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தாண்டு தொடங்கியது முதல் இதுவரை 312 நிறுவனங்களை சேர்ந்த 97020 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரபல லேஆஃப் வலைதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Zoom Layoffs
ADVERTISEMENT
ADVERTISEMENT