உலகம்

அமெரிக்காவில் சத்ரபதி சிவாஜி சிலை திருட்டு

DIN

அமெரிக்காவில் மராத்திய மன்னா் சத்ரபதி சிவாஜி சிலை திருடப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் இருந்து பரிசாக அனுப்பப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை, அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரப் பூங்காவில் நிறுவப்பட்டிருந்தது. அது வட அமெரிக்காவில் இருந்த ஒரேயொரு சிவாஜி சிலையாகும். அந்தச் சிலை திருடப்பட்டுள்ளது. அது எப்போது திருடப்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அந்நாட்டில் செயல்படும் கேடிவியூ செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT