கொழும்பு: அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஏராளமான இலங்கை ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது.
நீதிமன்ற உத்தரவின்படி, இலங்கையில் உள்ள அவரது தனி இல்லத்தில், மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனா். அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச (73), நாட்டைவிட்டு கடந்த ஜூலையில் தப்பினாா். முதலில் சிங்கப்பூருக்கும் பின்னா் தாய்லாந்துக்கும் சென்ற அவா், அதிபா் பதவியில் இருந்து விலகினாா்.
இதையும் படிக்க.. மூன்று மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்நிலையில், கடந்த செப்டம்பரில் தாய்நாடு திரும்பிய அவா், கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் அரசு பங்களாவில் தங்கியுள்ளாா்.
அவரது வீட்டை போராட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டு சூறையாடியபோது, ஏராளமான பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.