உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 568 ஆக உயர்வு!

DIN

துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள நகரங்களின் பல கட்டடங்கள் குலுங்கின. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 2,300 பேர் காயமடைந்துள்ளனர். 1,700 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துருக்கி-சிரியாவின் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 568 பேர் பலியாகியுள்ளனர். 

அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT