உலகம்

மார்ச்சில் ஸ்டார்ஷிப்பை விண்ணில் செலுத்தப்படலாம்: எலான் மஸ்க் தகவல்

DIN


செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு வீரர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்,  கடந்த ஆண்டு முதல் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது. 

இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் பூமியில் இருந்து விண்வெளியில் உள்ள இடங்களுக்கு மனிதர்களை பிற கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெரிய விண்கலம்.

100 டன் சரக்குகளை பூமியின் சுற்றுப்பாதைக்கு ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்டார்ஷிப் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வகை ராக்கெட்டை நாசா, அடுத்த ஆண்டு சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வதற்காக தேர்ந்தெடுத்து ஒரு முக்கிய திட்டமாக உள்ளது. 

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ஸ்டார்ஷிப்பை பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் அறிமுகப்படுத்துவதில் ஒரு உண்மையான காட்சி இருப்பதாகவும், மார்ச் மாதம் விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் ராக்கெட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். "மீதமுள்ள சோதனைகளை சரியாக நடந்தால், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் தொடங்க முயற்சிப்போம்," என்று ஸ்டார்ஷிப் பற்றிய பயனர் ஒருவரின் ட்வீட்டிக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT