உலகம்

சிலி: காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வு

5th Feb 2023 08:54 PM

ADVERTISEMENT

தென்-மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

சிலி நாட்டில் கோடை வெப்பம் காரணமாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை காட்டுத் தீக்கு சுமார் 14,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது. இந்த நிலையில் காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க- பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்

இதனை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். 1,429 பேர் தங்குமிடங்களில் உள்ளனர். 554 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 16 பேர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT