உலகம்

உளவு பலூன் சுட்டுவீழ்த்தப்பட்டதா? அமெரிக்காவில் இன்னொரு உளவு பலூன்!

4th Feb 2023 10:26 AM

ADVERTISEMENT

 

லத்தீன் அமெரிக்காவின் மீது மற்றொரு சீன உளவு பலூன் பறப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையிடமான பென்டகன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் முக்கியமான ராணுவப் பகுதிகளில் உளவு பலூன் பறந்து வருவதாகவும், அது சீனாவுடையது எனவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

அமெரிக்காவின் மான்டனா மாகாணத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட இந்த உளவு பலூனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனின் சீன சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

படிக்கசீன உளவு பலூனால் அமெரிக்காவில் பரபரப்பு

இந்நிலையில், லத்தீன் அமெரிக்காவின் மேற்பகுதியில் மற்றொரு உளவு பலூன் கண்டறியப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பாட்ரிக் ரைடெர், 

லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு உளவு பலூன் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது சீனத்தின் மற்றோரு உளவு பலூனாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். எனினும் லத்தீன் அமெரிக்காவின் எந்தப் பகுதிக்கு மேல் அந்த உளவு பலூன் உள்ளது என்பது தெளிவாக இன்னும் அறியப்படவில்லை எனக்குறிப்பிட்டார். 

இன்சைடர் பேப்பர் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை இணையதளம் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், உளவு பலூன் சுட்டுவீழ்த்தப்பட்டதுபோன்ற விடியோவைப் பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், உளவு பலூனிலிருந்த உதிரி பொருள்கள் எந்தெந்த பகுதிகளில் விழுந்துள்ளன என்பது குறித்து அறிய நாசா விஞ்ஞானிகளின் உதவியை அமெரிக்க ராணுவம் நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

உளவு பலூனால் பிரச்னை இல்லை

அமெரிக்க வான் எல்லைக்குள் சீனாவுக்குச் சொந்தமான உளவு பலூன் பறந்து கொண்டிருப்பதால் எந்தவித பிரச்னையும் இல்லை. தற்போதைய நிலையில் அந்த பலூனின் உளவு சேகரிக்கும் திறன் மிக மிகக் குறைவாகவே உள்ளது என அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

தங்களது வான் எல்லையில் சீன உளவு பலூன் பறந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதனை சுட்டு வீழ்த்தப் போவதில்லை என்று ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT