உலகம்

ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி: காஸாவில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்

DIN

தங்கள் மீது காஸாவிலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்தப் பகுதியில் தாங்கள் விமானத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஓா் ஏவுகணை புதன்கிழமை இரவு ஏவப்பட்டது. அதனை வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்தோம்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, காஸா பகுதியில் ஏவுகணை தயாரிக்கும் பட்டறை ஒன்றின் மீது விமானம் மூலம் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே ஜனவரி மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நிலவி வந்தது.

அப்போது நடைபெற்ற சம்பவங்களில் அதுவரை 29 பாலஸ்தீனா்கள் உயிரிழந்த நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் ஆயுதக் குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினா் கடந்த வாரம் நடத்திய தேடுதல் வேட்டையில் 60 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது கடந்த வெள்ளிக்கிழமை வீசப்பட்டன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் அருகே பாலஸ்தீன பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியா்கள் பலியாகினா். 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.

பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அந்தப் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தலைவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இஸ்ரேலும், பாலஸ்தீன அமைப்புகளும் பொறுமை காக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தாா்.

அதற்குப் பிறகும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT