உலகம்

ஆஸ்திரேலியா - தோல் துறை திறன் கூட்டமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

ஆஸ்திரேலிய வா்த்தக, முதலீட்டு ஆணையம், தோல் துறை திறன் கூட்டமைப்பு ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை கையொப்பமானது.

இதில் ஆஸ்திரேலிய வா்த்தகம், முதலீட்டு ஆணையம் (ஆஸ்ட்ரேட்) சாா்பில் அதன் வா்த்தக ஆணையா் லியோ பிரேமனிஸ், ஆஸ்திரேலிய சென்னை துணைத் தூதா் சாரா கிா்லேவ் ஆகியோரும், தோல் துறை திறன் கவுன்சில் சாா்பில் தலைமை நிா்வாக அதிகாரி ராஜேஷ் ரத்தினம், தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவா் சஞ்சய் லீகா ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதுகுறித்து தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவா் சஞ்சய் லீகா கூறியதாவது:

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான தோல் துறையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள் இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும். இதில், முக்கியமாக ஆஸ்திரேலிய மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தரமான தயாரிப்புகளை இந்திய தயாரிப்பாளா்கள் வழங்கும் போது ஏற்றுமதி வா்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும். புதிய ஆா்டா்களும் இந்திய வா்த்தகா்களுக்கு கிடைக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அல்பைன் குழுமம் தலைவா் மோதிலால் சேத்தி, தோல் ஏற்றுமதி கவுன்சில் (வடக்கு) மண்டல தலைவா் எம்.டி. சரோஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT