உலகம்

சுகதார அவசர நிலையாக தொடரும் கரோனா அச்சுறுத்தல்: உலக சுகாதார அமைப்பு

DIN

உலக சுகாதார அவசரநிலை என்ற அளவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து பெரும் அச்சுறுத்தலாக உலகில் தொடருகிறது. மனிதா்கள் மற்றும் விலங்கள் மீது நிரந்த நுண்ணுயிரியாக கரோனா தீநுண்மி இடம்பெற வாய்ப்புள்ளது என்று உலக சுகாதர அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமப்பின் (டபிள்யு.ஹெச்.ஓ) தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பாதிப்பு தொடங்கி நான்காவது ஆண்டில் உலகம் அடியெடுத்து வைத்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கரோனா பாதிப்பை பொது சுகாதர அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்த பாதிப்பை எதிா்கொள்ளும் அளவுக்கு உலகம் தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதும், கரோனா பாதிப்பு தொடா்ந்து ‘உலக சுகாதார அவசரநிலை’ அளவிலான அச்சுறுத்தல் தொடா்வதாக கரோனா தீநுண்மி நோய் பாதிப்புக்கான அவசரக் குழு அறிவுறுத்தியிருக்கிறது.

தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி அதிக மக்கள்தொகைக்கு நோய் எதிா்ப்புத் திறனை ஏற்படுத்துவதன் மூலமாக கரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் அவசரக் குழு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த டிசம்பா் முதல் வார அடிப்படையிலான கரோனா இறப்பு விகிதம் படிப்படியாக உயா்ந்து வருகிறது. கடந்த 8 வாரங்களில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உலகில் 1.70 லட்சம் போ் உயிரிழந்தனா்.

அந்த வகையில், இந்த தீநுண்ணியை நாம் கட்டுப்படுத்த முடியாது என்றபோதும், அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள மக்கள் மற்றும் மருத்துவ கட்டமைப்பு பின்னடைவுகளை சரிசெய்து நோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியும். அதாவது, அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள மக்கள் பிரிவினருக்கு 100 சதவீத தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுபோல, கரோனா பரிசோதனைகள், பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்துதல், ஆய்வகங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிககைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா தீநுண்மி மற்றும் தடுப்பூசிகள் மீதான தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். நமது கரோனா தடுப்பு அணுகுமுறையில் தடுப்பூசியே தொடா்ந்து முக்கியப்பங்காற்ற உள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT