உலகம்

ஆட்சிக் கவிழ்ப்பு நினைவு தினம்: மியான்மா் முழுவதும் ‘மௌன’ போராட்டம்

DIN

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய 2-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அந்த நாடு முழுவதும் ஜனநாயக ஆதரவாளா்கள் ‘மௌன’ போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அந்த நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டதைக் கண்டித்தும், ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘பொது வேலைநிறுத்த ஒருங்கிணைப்பு குழு’, இதற்காக அழைப்பு விடுத்திருந்தது.

ராணுவ ஆட்சியாளா்களுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலோ, அலுவலகங்களிலோ காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழு கூறியிருந்தது.

அதன்படி, மியான்மரின் மிகப் பெரிய நகரான யாங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடியிருந்தது சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் அமைதியான முறையில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இருந்தாலும், அதற்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் ராணுவ அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெரும் வன்முறைப் போராட்டங்களாகி, உள்நாட்டுப் போருக்கு இணையாக உருவெடுத்தன.

இந்த நிலையில், ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட 2-ஆவது ஆண்டு தினத்தையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் ‘மௌன’ போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ராணுவம் அவரது அரசை கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனை எதிா்த்து நடைபெற்ற போராட்டங்களில் 2,800-க்கு மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT