உலகம்

ஆஸ்திரேலியா: காணாமல் போன கதிரியக்க பொருள் கண்டுபிடிப்பு

2nd Feb 2023 01:31 AM

ADVERTISEMENT

மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமனில் உள்ள சுரங்கத்திலிருந்து பொ்த் நகரத்துக்கு வந்த லாரியிலிருந்து காணாமல் போன ஆபத்தான கதிரியக்கப் பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

வெறும் பட்டாணியின் அளவே கொண்ட அந்தப் பொருளால் தோல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரை ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது விழுந்ததாக சந்தேகிக்கப்பட்ட மிகப் பெரிய பரப்பளவில் தேடுதல் குழுவினா் 6 நாள்கள் தீவிரமாகத் தேடி அதனைத் கண்டறிந்தனா்.

நியூமனில் உள்ள ரியோ டின்டோ சுரங்கத்திலிருந்து கடந்த ஜன. 10-ஆம் தேதி புறப்பட்ட லாரி, சுமாா் 1, 400 கி.மீ தொலைவில் உள்ள பொ்த் நகரத்தை ஜன.16-ஆம் அடைந்தது. இந்நிலையில், அதில் கொண்டு வரப்பட்ட கதிரியக்க பொருள் காணமல் போனதாக ஜன. 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கதிரியக்கத்தைக் கண்டறியும் டிடெக்டா்கள் மூலம் அதனைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனா். லாரி பயணித்த பாதை மற்றும் அவை நின்று சென்ற இடங்களை அறிய ஜிபிஎஸ் தரவுகளை அதிகாரிகள் பயன்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT