உலகம்

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவை: நைஜீரியா

DIN

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவைப்படுவதாக நைஜீரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஆப்பிரிக்க நாடான நைஜீரியா கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் பாலைவனமாதலை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவைப்படுவதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து நைஜீரியாவின் நிதியமைச்சகத்தின் ஆலோசகர் கூறியதாவது: பருவ நிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிட உலகுக்கு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளை எதிர்த்துப் போரிட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக அளவிலான பணம் தேவைப்படுகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிட அதிக அளவிலான நிதியினை திரட்ட வேண்டும். அப்படி செய்யாமல் பருவநிலை மாற்றத்தை தடுப்பது குறித்து பேசுவது பயன் தராது. நாம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிவற்றைக் குறைத்து பசுமை சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும். உலகில் வெள்ளப்பெருக்கு மற்றும் பாலைவனமாதல் அதிகமாகி வருகிறது. அண்மையில் , நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிட்டத்தட்ட 600 பேர் பலியாகினர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT