உலகம்

பிரட்டிஷ் மன்னர் படத்தை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கும் ஆஸ்திரேலியா

2nd Feb 2023 01:46 PM

ADVERTISEMENT

கான்பெர்ரா: பிரட்டிஷ் மன்னர்களின் புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதிய 5 டாலர் நோட்டில், பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் புகைப்படத்துக்கு மாற்றாக, உள்நாட்டு வடிவமைப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

ஆனால், ஆஸ்திரேலிய நாணயங்களில், தொடர்ந்து மன்னரின் படம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

தற்போது, ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில், பிரிட்டி முடியாளர்களின் படம் இடம்பெற்றிருக்கும் ஒரு ரூபாய் தாளாக 5 ரூபாய் தாள் உள்ளது. இதனையும் மாற்றி புதிய வடிவில் வெளியிடுவது குறித்து ஆஸ்திரேலிய அரசு எடுத்த முடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT