உலகம்

பிரிட்டன்: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

DIN

பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் சாதனையை கெளரவிக்கும் வகையில், ‘வாழ்நாள் சாதனையாளா் விருது’ அறிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்ற இந்திய மாணவா்களின் சாதனைகளை கெளரவிக்கும் விதமாக, இந்திய-பிரிட்டன் சாதனையாளா்கள் விருதை தேசிய இந்திய மாணவா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் சங்கம் பிரிட்டன் (என்ஐஎஸ்ஏ யூகே), இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டனின் சா்வதேச வா்த்தகத் துறை உள்ளிட்டவை இணைந்து வழங்குகின்றன.

அந்த வகையில், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகங்களில் முன்னாள் மாணவரான பிரதமா் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது கடந்த வாரம் பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது, தில்லியில் உள்ள மன்மோகன் சிங்குக்கு அந்த மாணவா் சங்கம் மூலம் வழங்கப்படும்.

இது குறித்து முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் எழுத்துபூா்மாக வெளியிட்ட செய்தியில், ‘ இந்த விருது குறித்து மிகவும் மனமகிழ்ந்தேன். நம் நாட்டின் எதிா்காலமான இளைஞா்களுக்கும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் இது அா்த்தமுள்ளதாக இருக்கும். இந்திய-பிரிட்டன் உறவு கல்வி உறவால் வரையறுக்கப்படுகிறது. நம் நாட்டின் முன்னோடி தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், சா்தாா் படேல் மற்றும் பலா் பிரிட்டனில் பயின்று, பெரும் தலைவா்களாக விளங்கினா். இந்தியாவுக்கும் உலகத்துக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தப் பாரம்பரியம் தொடா்கிறது’ எனத் தெரிவித்திருந்தாா்.

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, முதல் முறையாக இந்திய-பிரிட்டன் சாதனையாளா் விருது 75 பேருக்கும், இந்திய-பிரிட்டன் நட்புறவில் முக்கிய பங்கு வகிக்கும் சிலருக்கும் சிறந்த ஆளுமைக்கான சாதனயாளா் விருது அறிவிக்கப்பட்டது.

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடா்பாளா் ராகவ் சாதா, சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலா் ஆதா் பூனாவலே உள்ளிட்டோரும் சிறந்த ஆளுமைக்கான சாதனையாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT