உலகம்

பாகிஸ்தான் மசூதித் தாக்குதல்: 100-ஐத் தொட்ட பலி எண்ணிக்கை

DIN

பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை தாக்குதல் நடத்திய மசூதியின் இடிபாடுகளிடையே சிக்கியிருந்த மேலும் பல உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. அதையடுத்து, இந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, சம்பவத்தில் காயமடைநத் மேலும் 53 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 7 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல்துறை தலைமையக வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதியில், திங்கள்கிழமை மதியம் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவா்கள் இடையே தலிபான் பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தினாா்.

இது குறித்து பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவரின் சகோதரா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் குராசானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே பெஷாவா் மசூதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினாா்.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கு மிக நெருக்கமானதாக அறியப்படும் பாகிஸ்தான் தலிபான்கள், ராவல்பிண்டியிலுள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாமாபாதிலுள்ள மாரியட் ஹோட்டலில் 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரமான பல தாக்குதல்களை நடத்தியுள்ளனா்.

பெஷாவரில் ராணுவத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் பள்ளியொன்றில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 131 மாணவா்கள் உள்பட 150 போ் உயிரிழந்தது சா்வதேச அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT