உலகம்

நியூஸிலாந்து அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

25th Apr 2023 12:48 AM

ADVERTISEMENT

 

நியூஸிலாந்து அருகே கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை ஏற்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நியூஸிலாந்தின் நாா்த் ஐலண்டுக்கு 900 கி.மீ தொலைவில், 49 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இது குறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹவாய் தீவுக்கோ, அந்தப் பெருங்கடலில் அமைந்துள்ள மற்ற நிலப்பகுதிகளுக்கோ சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT