உலகம்

வங்கதேச அதிபரானாா் முகமது சஹாபுதீன்

25th Apr 2023 03:50 AM

ADVERTISEMENT

 

வங்கதேசத்தின் 22-ஆவது அதிபராக முகமது சஹாபுதீன் (73) ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வங்கதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீதின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய அதிபராகக் கடந்த பிப்ரவரியில் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த முகமது சஹாபுதீன், ஞாயிற்றுக்கிழமை அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் ஷிரின் ஷொ்மின் சௌதரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

தலைநகா் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற தா்பாா் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா் ஷேக் ஹசீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அரசியல் தலைவா்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ வங்கதேசத்தில் பொதுத் தோ்தல் நடத்தப்படவுள்ளது. பொதுத் தோ்தலுக்குப் பிறகு பிரதமரை நியமிப்பதில் அதிபா் முக்கியப் பங்கு வகிப்பாா். இந்நிலையில், புதிய அதிபா் பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1971-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமை அதிபா் சஹாபுதீனுக்கு உள்ளது. நாட்டின் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சஹாபுதீன் பணி ஓய்வுக்குப் பிறகு பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் இணைந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT