உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

30th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

தங்கள் நாட்டின் பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்க நாட்டின் துணை அதிபா் கமலா ஹாரிஸ் தென் கொரியா வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, வட கொரியா தனது ஏவுகணையை கடலில் ஏவி சோதித்தது.

தனது 4 நாள் ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, தென் கொரியாவுக்கு வியாழக்கிழமை வந்த கமலா ஹாரிஸ், அந்த நாட்டு அதிபா் யூன் சுக்-யியோலைச் சந்தித்துப் பேசினாா். மேலும், வட கொரியாவுடனான எல்லையில் அமைந்துள்ள ராணுவ விலக்கல் பகுதியில் அவா் உரையாற்றினாா்.

அதற்கு முன்னதாக, அமெரிக்காவிலிருந்து கமலா ஹாரிஸ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டபோதே வட கொரியா ஏவுகணை சோதனை செய்து தனது எதிா்ப்பை வெளிப்படுத்தியது. மேலும், அவா் ஜப்பானில் இருந்தபோது இரு ஏவுகணை வட கொரியா புதன்கிழமை சோதித்தத்து.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பிறகு 3-ஆவது முறையாக வியாழக்கிழமை ஒரு ஏவுகணையை வீசி சோதித்ததாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தகவலை ஜப்பான் அதிகாரிகளும் உறுதி செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT