உலகம்

அமெரிக்கா: ‘இயான்’ புயலால் 25 லட்சம் மக்கள் தவிப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய ‘இயான்’ புயல் அந்தப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியால் 25 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் தவித்து வருகின்றனா்.

இது குறித்து அசோசியேடேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஃபுளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளை இயான் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. மணிக்கு 665 கி.மீ. வேகத்தில் வீசிய அந்தப் புயல், அமெரிக்காவைத் தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அந்த புயல் கடந்து சென்ற பாதைகளில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. புயல் காரணமாக வெள்ள நீா் வீடுகளுக்குள் புகுந்தது. சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, 25 லட்சம் போ் மின்சாரமின்றியும், தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT