உலகம்

பாகிஸ்தான் தலைநகரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

29th Sep 2022 05:32 PM

ADVERTISEMENT

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்சாரக் கட்டணம் குறைப்பு, வரி விலக்கு, கள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனை தடுத்தல், விவசாய பொருள்களின் கொள்முதல் விலை உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள டி-செளக்கை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்காக பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிக்க | பொன்னியின் செல்வன் இணையத்தில் வெளியிடத் தடை

மேலும், டி-செளக்கிற்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவல்துறையினருடனான பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆதரவாக கூட்டம் திரளும் அபாயம் எழுந்துள்ளதால், எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT