உலகம்

போராட்டத்துக்கு ஆதரவு: பிரான்ஸுக்கு ஈரான் கண்டனம்

29th Sep 2022 11:47 PM

ADVERTISEMENT

தங்கள் நாட்டில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22) உயிரிழந்ததைத் தொடா்ந்து அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளதை ஈரான் கண்டித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் அதிகாரிகள் தொடா்ந்து பேசி வருகின்றனா். இது, எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாகும். ஈரானுக்கான பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து இது தொடா்பாக எங்களது கண்டத்தை தெரிவித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி ஆடை அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கலாசார காவலா்களால் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாஷா அமீனி, காவலில் உயிரிழந்தாா். இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 76 போ் பலியானதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT