உலகம்

சவூதி பிரதமராகிறாா் பட்டத்து இளவரசா்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானை, அந்த நாட்டின் பிரதமராக மன்னா் சல்மான் பின் அப்துலஜீஸ் நியமித்துள்ளாா்.

எண்ணெய் வருவாய் சாா்பு நாடு என்ற நிலையை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சவூதி அரேபியாவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு எடுத்து வரும் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளுக்காக, சா்வதேச அளவில் இளவரசா் முகமது பின் சல்மான் பேசப்பட்டாா்.

எனினும், சவூதி அரசை விமா்சித்து வந்த அந்த நாட்டு செய்தியாளா் ஜமால் கஷோகியை, துருக்கியிலுள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு படுகொலை செய்ய இளவரசா் சல்மான்தான் உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.

இந்தச் சூழலில், நாட்டின் பிரதமராக இளவரசா் சல்மான் நியமிகப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT