உலகம்

10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்

29th Sep 2022 07:21 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்ற பாதிப்பு தற்போதைய காலத்தில் உலகின் முன்னணி பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். 

இதையும் படிக்க | அசாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயம்!

இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக சமீபத்திய அறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. குளோபல் விட்னஸ் எனப்படும் அமைப்பு பத்தாண்டுகளில் உலகளாவிய சுற்றுச்சூழல் போராட்டங்கள் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

ADVERTISEMENT

அதில் உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 1733 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக அமேசான் காடுகள் அமைந்துள்ள பிரேசிலில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது அதிகப்படியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் மட்டும் 85 சதவிகிதமான கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | பாகிஸ்தான் தலைநகரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

குறிப்பாக பிரேசில், கொலம்பியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மட்டும் தலா 300 கொலைகள் நடந்தேறியுள்ளன. மெக்சிகோ மற்றும் ஹாண்டுராஸில் தலா 100 பேரும், குவாதமாலாவில் 80 பேரும், இந்தியாவில் 79 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 

இத்தகைய கொலைக் குற்றங்கள் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஆய்வறிக்கையானது காலநிலை பாதிப்புகளைக் களைவதற்கான ஜனநாயக குரல்கள் தொடர்ந்து ஒடுக்குப்பட்டு வருவதை கவலையுடன் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT