உலகம்

ரஷிய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கும் ஃபின்லாந்து

29th Sep 2022 05:08 PM

ADVERTISEMENT

ரஷியாவில் இருந்து ஃபின்லாந்துக்கு சுற்றுலா விசாவினைப் பயன்படுத்தி சுற்றுலா வரும் ரஷிய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய தடை உத்தரவு நாளை (செப்டம்பர் 30) முதல் அமலுக்கு வரும் எனவும் ஃபின்லாந்து அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபின்லாந்தின் இந்தப் புதிய தடை உத்தரவின் மூலம் ரஷியாவிலிருந்து ஃபின்லாந்துக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். அதேபோல ரஷியாவிலிந்து ஃபின்லாந்து வழியாக மற்ற நாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெக்கா ஹவிஸ்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: ‘ரொம்ப பயமா இருக்கு...’ பொன்னியின் செல்வன் குறித்து நடிகர் விக்ரம்

ADVERTISEMENT

ரஷியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஃபின்லாந்து நாட்டின் மற்ற நாடுகளுடனான சர்வதேச உறவுகள் பாதிப்பதாக தனது இந்த திடீர் முடிவுக்கு ஃபின்லாந்து அரசு விளக்கமளித்துள்ளது. இந்த முடிவு குறித்து ஃபின்லாந்து சார்பில் வேறு எந்த ஒரு கருத்தும் கூறப்படவில்லை.

முன்னதாக, சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு அனுமதிக்கப்படும் விசாக்களில் ரஷியப் பயணிகளுக்கு ஃபின்லாந்து அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT