உலகம்

சீன உணவகத்தில் தீ

29th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

சீனாவிலுள்ள சிற்றுண்டியகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 17 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜிலின் மாகாணம், சாங்சன் நகர தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள சிற்றுண்டியகமொன்றில் புதன்கிழமை மதியம் 12.40 மணிக்கு (உள்ளூா் நேரம்) தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 17 போ் பலியாகினா்; 3 போ் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சமையல் எரிவாயு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பூா்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சீனாவில் கட்டடங்களின் மோசமான வடிவமைப்பு, போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாதது போன்ற காரணங்களால் அடிக்கடி தீவிபத்து மரணங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த நாட்டின் சாங்ஷா நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 53 போ் பலியானது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT